Name:
Location: DIASborough, Ontario, Canada

Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.

Powered by Blogger

Sunday, March 27, 2005

கண்களைப் பராமரித்தவன்



ஜீலிஸ் பூசிக்கின் அழுகிய கண்களை
பராமரித்த
அந்த மரண தண்டனைக் கைதி
என்னுடன் எப்போதும் இருந்ததில்லை
அவனை நான் நேசித்தேன்
என் கனவுகளில் வருகிற நாயகன் அவன்தான்.
பூசிக் அவனை ஒரு அழகனாகவோ
ஆண்மையானவனாகவோ உருவம் தரவில்லை.
ஜீலிஸ் பூசிக் சொல்கிறான்
தன் பிண உடலுக்கு
உணவூட்ட
அவன் மிகவும் முயன்றான் என.
அப்படி ஒரு மனிதன்
தண்டனைக்குள்ளான பிற்பாடு
என்னைப் போல பெண்கள்
தடியன்களையும் தந்திரக்காரர்களையும்
மணந்தனர்
காலம் கண்களை அழுக்காக்கியது
அவர்களின் ஆனந்த விழிகள்
பராமரிப்பாரற்று அழுகின
அவர்களுக்கு ஒரு மரண தண்டனைக் கைதியின்
பராமரிப்பு மறுக்கப்பட்டிருந்தது
வெகுகாலத்துக்கு முன்பே
கறுப்பன் யேசு, யூதன் ஆக்கப்பட்டபோது
நல்ல ஆண்கள் இறந்து போயினர்
மேலும்
போராட்டங்களில்
கிளர்ச்சிகளில்
அடக்குதலில்
வக்கிரங்களில்
உயரத்தில்
அகண்ட தோள்களில்
தொடர்ச்சியாய் அவர்கள் மரணித்தனர்
ஜீலிஸ் பூசிக்கின் அழுகிய கண்களை
அருவருப்பற்று துப்பரவு செய்தவன்
1940 களில் வாழ்ந்திருக்கிறான் என்பது
என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது
~



2001 மூன்றாவது மனிதன், இதழ் 11

Comments on "கண்களைப் பராமரித்தவன்"

 

Anonymous Anonymous said ... (April 19, 2005 4:49 p.m.) : 

மிக அருமையான கவிதை.
நன்றிகள்.

உங்கள் பதிவை குறித்து ஒரு சுட்டி
http://paari.weblogs.us/archives/65

 

Blogger தனேஸ் said ... (October 18, 2006 8:41 p.m.) : 

மிகவும் நல்ல கவிதை! ஜூலிஸ் பூசிக் என்பவரைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. இணையங்களில் தேடலாமென்றாலோ, சரியான ஆங்கிலப் பெயர் என்னவென்பது தெரியவில்லை. தெரியப்படுத்தினால் உதவியாகவிருக்கும்!

 

Blogger deep said ... (October 24, 2006 9:04 p.m.) : 

நனறி நெல்லி..
ஒரு கம்யூனிஸ்டான
ஜூலிஸ் பூசிக் Nazi சிறையிலிருந்துபோது எழுதியது "தூக்குமேடைக் குறிப்புகள்" என தமிழில் மொ-பெயர்ப்பாக வந்தது. மிகவும் உணர்ச்சிகரமான நூல்.

 

Blogger deep said ... (October 24, 2006 9:06 p.m.) : 

சரியான ஆங்கிலப் பெயர் பாத்திற்றுப் பதிகிறேன் இங்கு.

 

Blogger deep said ... (October 25, 2006 3:45 p.m.) : 

there u go, this is what in the tamil book as author's name:
Julice Buzik
(but i couldn't find any informations in the net when googling; so this may not be the CORRECT english spelling for the name)

தமிழ்ப் புத்தகாலயம் is the one published in Tamil.

U could buy translated book in
newbooklands.com (U could ask them to order if its out of stock).

 

Blogger deep said ... (October 25, 2006 4:07 p.m.) : 

got it!
http://en.wikipedia.org/wiki/Julius_Fucik

Originally spelled: Julius Fučík

 

Blogger buzik said ... (January 05, 2008 4:59 a.m.) : 

hello sir .. i need a clear inormations about julice buzik. because i could not find any information about him in net. my name also julice buzik..

 

Anonymous Anonymous said ... (January 05, 2008 2:05 p.m.) : 

hello julius:
copy & paste this link: http://en.wikipedia.org/wiki/Julius_Fucik

we (Tamils) have known him thru the book "Notes from the Gallows" which was translated into many languages.

u can sure find this book in ur language as well. let me know if u still find trouble..!

 

Blogger buzik said ... (June 05, 2008 9:55 a.m.) : 

hello sir iam confused about that book .. will you tell me ,, where can i buy the book "notes from the gallows"

 

Blogger deep said ... (June 05, 2008 4:00 p.m.) : 

where r u frm?
U shud b able 2 find in da library.
if not, able 2 buy here:
http://www.amazon.com/s/ref=nb_ss_gw?url=search-alias%3Dstr

 

Blogger deep said ... (June 05, 2008 4:03 p.m.) : 

sorry follow this link:
http://www.amazon.com/s/ref=nb_ss_gw?url=search-alias%3Dstripbooks&field-keywords=Julius+Fucik&x=20&y=22

 

post a comment