உன்னிடமிருந்து பிரிகிறேன், என் கீதத்தைப் பாட அந்தரங்கத்தை இசைக்க ஆன்மாவைப் போற்ற என் சுயத்தை வளர்க்க உரிமை ததும்பும் உன்னுடைய பெண்ணாக இருப்பது பேரானந்தம்தான் அவளை நீ குறைத்துக் கொண்டாலும் கீழ் நிலையில் வைத்திருந்தாலும் என்னுடைய பெண் எகிறாள். இது நாள் வரையில் சிவத்த ரோசாவுக்குரிய மெதுமை தன்னை வருடி கனவு காணச் சொன்ன பழசை தினக் குறிப்பில் புரட்டத் தளம்புகிறாள், உடைந்த கோப்பையின் துகள்கள் என எடுத்துக் கொள்ள விரும்பி. உனது தடைகளை குற்றச்சாட்டுக்களை விசாரணைகளை கோபங்களை அருவருப்புகளை மீறி- உன்னிடமிருந்து பிரிகிறேன் ஒரு சோடி கண்களால் உலகில் வாழப் போவது உன்னுடைய பெண்ணின் மரணத்தைக் கொண்டாடும் இரக்கமற்ற நான். ~ 2000 கணையாழி கனடா சிறப்பிதழ் |
About Me
- Name: deep
- Location: DIASborough, Ontario, Canada
Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.
Comments on ""
Welcome predeepa!
Ur sellections r good.Do something ur own as well.That will promote u.Go ahead.
Thanks Arunan.
These are actually my own writings, though I wrote them in different time periods! In this blog just compiling the (un)published writings of mine. that's all. lets see about the promotion!!
Hi, i am confused by ur blogs's writings, who wrote these writings? if u deepa thillainathan,then,in which periodes u wrote this?
உன்னிடமிருந்து பிரிகிறேன்,
என் கீதத்தைப் பாட
அந்தரங்கத்தை இசைக்க
ஆன்மாவைப் போற்ற
என் சுயத்தை வளர்க்க
if it is true then Deepa, i will be happy abt it
regards
இதில சந்தோசப்படவும் துக்கப்படவும் (இனியும்!) என்ன இருக்கு?
கவிதை/கதை/whatever எல்லாமே ஒரு மனோநிலையே. இது 2000 என இருக்கு, ஆனா 2001 ஆம் ஆண்டில எழுதியது..