Monday, May 16, 2005

அக்காவும் நானும்


****

இரும்புக் கட்டில், திரைச் சீலைகள்
யன்னல் ஊடே ஒளி
கண்களை அடிக்கும்.
தூரத்துப் பார்வை போல்
அண்மையும் அழியுமோ என
விழி ஒளித் தெறிப்பில் பயம் புகும்

அருகில்
களைப்புடன் அக்கா
உறங்கிக் கொண்டிருந்தாள்.
ஓய்ந்து கிடந்த மெல்லிய பாதங்களை
வருட வேண்டிய
அவளது கனவுகளுக்குரியவன்
தூர தேசத்தில்
ஒரு பகலில்
இயங்கிக் கொண்டிருப்பான்
அல்லது அலைக்கழிந்து கொண்டிருப்பான்

அப்போது:
அன்று அவன் கேட்ட
"அவளிலா என்னிலா"வுக்கு உரிய அவள்
நட்சத்திரங்கள் கை காட்டிய
தீர்கக் தரிசனங்களை
எதிர்பார்த்திருப்பாள்.
~


4:08பகல், மே 31, 2000.

Comments on "அக்காவும் நானும்"

 

Blogger Muthu said ... (May 31, 2005 2:40 p.m.) : 

பிரதிபாதி,
உங்களுக்குக் கவிதை நன்றாய் வருகிறது.

 

post a comment