எனது பட்டியல்
மதி என்னையும் ‘புத்தக தொட்டுப்பிடிக்கிற’ விளையாட்டுக்கு அழைத்திருந்தார்... so, there U go, this is my list: என்னிடம் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை: சுமார் 400-450 கடைசியாக வாங்கிய/வாசித்த புத்தகங்கள்:
கடைசியாகப் பரிசாகக் கிடைத்த புத்தகங்கள்:
2. பாலாஜி-பாரி 3. சக்தி 4. ஈழநாதன் 5. டீ.ஜே.தமிழன் |
Comments on "எனது பட்டியல்"
//என்னிடம் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை:
சுமார் 400-450//
பொறுங்கோ வயிறு எரியுது.தாய்லாந்திலிருந்து வந்த இளநீர் கொஞ்சம் குடித்துவிட்டு வாறன்.
பிரதீபா, எனது லிஸ்ட் நாளை எழுதுகின்றேன். அழைத்ததற்கு நன்றிகள்.
எனது பதிவு :)
http://paari.weblogs.us/archives/93
பிரதீபா அழைப்புக்கு நன்றி. எனக்கும் ஒரு பட்டியல் போட ஆசைதான். ஆனால் மதியும், பாலாஜி-பாரியும் எனக்கு அன்பளிப்பாகத் தருவதாகக் கூறிய புத்தகங்களை இன்னமும் தராததால் பட்டியலை முழுமைப்படுத்த முடியாமல் இருக்கின்றது. இனி அவர்கள் எப்போது புத்தகம் தந்து, நான் அதை வாசித்து, ஒரு பட்டியல் தயாரிப்பது? இது இவர்கள் இருவரின் திட்டமிட்ட சதியென்று மட்டும் இப்போதைக்கு புரிகின்றது. அதுசரி, மதி கூழ் எப்படி இருந்தது :-)? சக்தி, இதுக்கு எல்லாம் வாபஸ் பெறுவதா? என்னுடைய முழுமை பெறா பட்டியலில் முக்கால்வாசி நான் படித்த (அல்லது படித்ததாய் பாசாங்கு செய்த) பாடப்புத்தகங்களைத்தான் பட்டியலிட்டிருக்கின்றேன். அதிலும் கொடுமை, பல புத்தகங்கள் முழுவதும் தேற்றங்களும், எண்களும் மட்டும் நிரம்பியது. ஆகவே நீங்கள் பயமில்லாது பட்டியலிடவும். தற்சமயம் கைவசமில்லாமல், நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகங்களையும் நீங்கள் பட்டியலிடலாம். மதி உங்களுக்கு அவற்றை அன்பளிப்பாக அனுப்பி வைப்பார் :-).
ஈழநாதன், பாலாஜி-பாரி,
பிரதீபா, Shakthi, டிசே தமிழன்..
எல்லோருக்கும் நன்றி
சக்தி: எப்போதுமே இலக்கங்களில் சுவாரசியம் இல்லை; எதிலிருந்தும் என்ன பெற்றுக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.. So நேரங்கிடைக்கும்போது வலைப்பதியுங்கள்.
நன்றி!
//மரப்பாச்சி – உமா மகேஸ்வரி//
நான் வாசித்த இந்த புத்தகத்தை யரும் குறிப்பிடவில்லையே என்று ஏங்கியிருந்தேன், இங்கே பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது