அப்பாவிற்கு அன்பைக் கூறல்
துளிர்த்து வளர்ந்து இறந்து மீண்டும் பிறந்து உலகை அளந்து ஆழக் கடலில் எங்கு புதைந்துள்ளதுன் இருப்பு உறங்கிக் கிடந்த எரிமலையைக் கீற காமந் தாங்காது அது சீறி வெடிக்க கடலைத் தாண்டி நெருப்பு பீரிட அடடா அழிவு என்றபடி திறந்த சன்னல்களை மூடிப் போகும் தம்பிகளின் குருவாய் கல்விச் சுமை கடமை எனத் தடங்குவதும் அமுக்குவதுமாய் அடக்க எளிதாய் என்னுள் இறங்குது வீரம் கால்களின் உளைவோ கண்களின் கடுமையோ தகர்த்து எமக்கான கணங்களில் எமக்கான மணிகளில் எமக்கான சுதந்திரம், சுதந்திரமானது ஆழப் புதைந்த வேர்களின் நாற்றம் எடுத்து புண்ணின் வலியில் கிளலும் ஆண்மை பின்னெடுத்து அப்பாவிற்கு அன்பைக் கூறல் நிகழ்ந்தது நிகழும். ~ ஏப்ரல் 07, 2000 12:32 p.m. |
Comments on "அப்பாவிற்கு அன்பைக் கூறல்"