Name:
Location: DIASborough, Ontario, Canada

Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.

Powered by Blogger

Tuesday, June 28, 2005


றவா வரம் பெற்ற
நூற்றாண்டுகளின் வரட்சியுடன்
நடுவெட்டு நீள்ப் பாவாடை
சலசலப்பில் விலத்திக் காட்டும்
குச்சிக் கால்களை மறைத்து
இழுத்து மூடி
புழுக்கத்துள் நடக்கிறாள்

அன்றைய காலங்களில்
ஆடைகளின் சுமையோடு
வழமைகள் மாத்(தி)ரம் பேசிற
பெரும் அலைச்சலுடன்
உங்கள் வாயில்களிலிருந்த
அந்தப் பெண்ணை மறந்திருப்பீர்கள்

செல்வந்த வீடுகள் தாண்டும் பேருந்தில்
காலத்தைத் தாண்டா வயதில்
தரிப்பிடத்தில் இறங்குகையில்
ஏறுகையில்
அன்றைய இறுக்கத்தில்
உதடுகளில் வலுவின்றி நின்ற என்னைக்
கடந்து போகிறீர்கள்

பிரத்தியேகமற்ற உங்கள் கண்கள்
அன்று போலவே
விதித்ததைக் தொடர்கின்றன

கண்ணாடியூடாய்
அடிக்கிற வெய்யிலில்
மெல்லிய என் முடி
நீட்டுகிறது
சோர்ந்த அதன் முட்களை

வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்
நகரங்களில் அலைவார்கள்

வீதிப் பெண்கள் தான்
சொல்லிக் கொண் டிருப்பார்கள்:
"இவர்களிடம்
இனிய கனவுகள் இருந்தன"

அதிர்வை ஊட்டி
கலைந்து செல்கிறார்கள்...
~


(2000)
ஓவியம்: "Just in Passing", Sarah Bishop

Comments on ""

 

Blogger aazhiyaal said ... (June 29, 2005 7:36 p.m.) : 

பிரதீபா, இக் கவிதை என்னைப் பொறுத்தவரை இறுக்கமாக நல்லாய் இருக்கு.
முதல் stanzaவில் 'புழுக்கத்துள் நடக்கிறாள்' மூலம் genderஐ குறிக்கிறீர்கள். இரண்டாவதில் 'அந்தப் பெண்ணை மறந்திருப்பீர்கள்' என்று generalise பண்ணுகிறீர்கள். மூன்றாவதில் 'உதடுகளில் வலுவின்றி நின்ற என்னைக் கடந்து போகிறீர்கள்' என specific ஆக சொல்லுகிறீர்கள். பிறகு ஒரு படிமம் வருகிறது. அது இவ்வுலகின் துன்பங்களையும், அவமானத்தையும் ஏற்றுக்கொண்ட இயேசுவின் முள்முடியாய் வெளிப்படுகிறது. அதன் பின்
'வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்
நகரங்களில் அலைவார்கள்' வரை கவிதை விளங்குகிறது. அதனால் வாசிக்க நல்லாயிருக்கிறது.

பிறகு
வீதிப் பெண்கள் தான்
சொல்லிக் கொண் டிருப்பார்கள்:
"இவர்களிடம்
இனிய கனவுகள் இருந்தன"

அதிர்வை ஊட்டி
கலைந்து செல்கிறார்கள்...

என்று வருகிறது. இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டு வந்தவளுள் வீதிப்பெண்கள் வரமாட்டார்களா? அவர்கள் வேறு இவள் வேறா? ஒருக்கால் தெளிவிக்கவும்.

 

Blogger deep said ... (July 09, 2005 9:54 p.m.) : 

வாசிப்பிற்கு நன்றி ஆழியாள்.
கவிதை 'வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்
நகரங்களில் அலைவார்கள்' என்பதோடையே முடிவதாக இருக்கலாம். எனினும் மேலவும் முன்பு அவர்களிடம் 'இனிய கனவுகள் இருந்தன' என்பதைச் சொல்ல வேண்டும்போல இருந்ததால்
கடைசி வரிகள் சேர்த்துக்கொண்டேன். அவளும் வீதிப்பெண்களுள் அடங்குபவளே. வீதிப்பெண்கள் என்கிற குறிப்பிடல் அவர்கள் இவளை/இவர்களை -இவர்கள் கனவுகளை- அறிவார்கள் என்கிற அர்த்தத்தில்...

 

Blogger aazhiyaal said ... (July 10, 2005 3:59 a.m.) : 

விளக்கத்துக்கு மிக நன்றி. மேலும் கவிதைகளை எதிர்பார்த்து....ஆழியாள்

 

post a comment