Name:
Location: DIASborough, Ontario, Canada

Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.

Powered by Blogger

Saturday, July 09, 2005

பிரபஞ்சம் என் வசம்





















நிறையக் கனவுகளுடனும்
சலிப்பும் விரக்தியும் விரட்ட
என்னை எட்டிப் பிடிப்பதாய்
நானிருந்தேன்.

மனிதர் ஏமாற்றியது போல
உடம்பும் ஆன்மாவும் பிரதிபலித்திட
நம்பிக்கையை இழுத்துப் பிடிக்க
பிரயத்தனங்களுடன்
நானிருந்தேன்.

வருடங்களின் ஆரம்பத்தில்
புதிதைப் பாட
மார்பகங்கள் பூரிக்க
குரூரங்களை விமர்சித்தபடி
அழகுகளை ஆராதித்தேன்.

விஷமான உறவுகள்
மீளத் தள்ளி விடாமல்
அன்பு செய்யும் தத்துவம்
எய்து விடாதபடி
பறந்தேன்.

நான் என்பது விஸ்தாரம்
நான் என்பது சுய வாழ்தல்
நான் என்பது பிற பிரக்ஞை

நான் என்பது கட்டற்ற காதல்.
~


படம்: நன்றி.

ஜனவரி 01/2001
published in காலம் (2003)

( முடிக்கப்படாத பிரதியிலிருந்து)

Comments on "பிரபஞ்சம் என் வசம்"

 

Blogger U.P.Tharsan said ... (July 21, 2005 6:30 p.m.) : 

கவிதை நன்றாக இருக்கிறது. எனினும் ஏன் நீங்கள் போடும் படங்கள் தெளிவாக இல்லை?

 

post a comment