துளிர்ப்பின் மூலம்
வெளியில் வெறுமையாய் தெரு திண்மமாய் ஓர் அசைவும் அற்றுப் போன இரவில் கடும் சுமை கமழும் அறையில் கட்டில் அருகே யன்னல் என் விம்பத்தை விழுத்தும் வெளிச்சத்தை அணைத்து வெளியில் குமிளும் தெரு விளக்குப் படர்கையில் என்னுள் உன் இன்மையின் சாயல் என்னோடு சேர விரும்பும் உன் வெளிப்படை என்றாகிலும் எனக்கும் வாய்க்குமெனில் உனக்கான நேசத்தை உணர்த்திட முடியும் உலகில் உயர்ந்தது அது என சொற்களால் இட்டுக் கட்ட வார்த்தைகள் என்னிடம் வசப்படுவதும் இல்லை இருளும் இளகுதலும் ஒரு நதி ஓரத்தில் நீயும் நானும் நட்பும், கொஞ்சும் குரல்களும் விவாதமுமாய் கரம் கோர்த்து தோள் சாய்ந்து இசையுள் இழைதல் போல் என்னுள் ஓர் பரவசம் நிகழும் மார்பு நெகிழும் பக்கத்தில் நீ இல்லை. ~ ஓவியம்: அருந்ததி நன்றி: ஊடறு இணையத்தளம் /poem published in பெண்கள் சந்திப்பு மலர் 2001/ |