பிரதீபா.தி கவிதைகள் (03)
![]() 01. நீ படிக்கச் சொன்ன புத்தகம் பார்க்கத் தந்த நாடகம் எதிலுமே என்னைக் காணவில்லை அவர்கள்: நீ படைத்த பெண்கள் உண்மையில் நான் வேறு. என் உண்மைக்கு இங்கே உப்புக் காசு தேறாது ~ 02.. அழகான மலர் போன்ற பெண்ணை எதுவும் பாதிப்பதில்லை உண்மை, 'அழகான மலர்' பெண் இல்லை அவள் உத்திரப் பிரதேசத்தில் ஒருமுறையும் போராட்டத்தில் கதறலாயும் போரிடலாயும் அமெரிக்காவில் மூர்க்கம் பிடித்த கறுப்புப் பெண்ணாய் ஒரு லெஸ்பியனாய் பிறப்பதில்லை. ~ 03. நீங்கள் சிலபேர், ஆண்கள் உங்களிடையே ஒரு பெண் நடந்து வருவாள்.. என்ன சொல்கிறீர்கள்? ஒரு பூலான் தேவியாய் அவள் எதிர் புரட்சிக்காரி என்றே ஆயினும் நடக்கலாமெனில் விடுதலையை உறுதி செய்ய கோடுகள் அழியும் பூட்டுக்கள் உடையும் நீங்கள் சிலபேர், ஆண்கள். ~ (முடிக்கப்படாத ஒரு பிரதியிலிருந்து, 2000) published in kalam 25,2005 photo |
Comments on "பிரதீபா.தி கவிதைகள் (03)"