என்னுடைய நாட்கள்
![]() கருநீல வானம் பழசு எனும் கவிஞர் மத்தியில் 'இறக்கைகள் விரித்துப் பற’ கடைசி வரி எழுதிவிட்டு வீட்டுக்குட் பறந்த எழுதாப் பெண்கள் அட, என்னுடைய நாட்கள் பச்சைத் தரை நதிக் கரை மஞ்சட் பூக்களல்ல. நம்பிக்கையை உடலெங்கும் பரவ விட்டு மதுக் குளிர்மையாய் உற்சாகமாய் இருப்பேனென வேண்டுமானால் நம்பிக் கொண்டிரு எழுதுகோலின் கோலமெல்லாம் வெறும் கோஷங்களாக சுருங்கிப்போன பின் மேலும் நான் சிறகுகளை நம்பத் தயாரில்லை இவ் இலட்சணத்தில் என் உயிரின் அடித்தளத்தை திறந்து வேறு காட்ட வேண்டுமா? இன்றைய கணத்தில் என் ஒரே ஆசையும் எளிய வேட்கையும் எனைத் தழுவும் காற்றை நேசிப்பது மாத்திரமே ~ ஜீலை 05, 2000 11:18 p.m. ஓவியம்: Moniha நன்றி: ஊடறு இணையத்தளம் (poem published in பெண்கள் சந்திப்பு மலர் 2001) |
Comments on "என்னுடைய நாட்கள்"