துளிர்ப்பின் மூலம்
![]() வெளியில் வெறுமையாய் தெரு திண்மமாய் ஓர் அசைவும் அற்றுப் போன இரவில் கடும் சுமை கமழும் அறையில் கட்டில் அருகே யன்னல் என் விம்பத்தை விழுத்தும் வெளிச்சத்தை அணைத்து வெளியில் குமிளும் தெரு விளக்குப் படர்கையில் என்னுள் உன் இன்மையின் சாயல் என்னோடு சேர விரும்பும் உன் வெளிப்படை என்றாகிலும் எனக்கும் வாய்க்குமெனில் உனக்கான நேசத்தை உணர்த்திட முடியும் உலகில் உயர்ந்தது அது என சொற்களால் இட்டுக் கட்ட வார்த்தைகள் என்னிடம் வசப்படுவதும் இல்லை இருளும் இளகுதலும் ஒரு நதி ஓரத்தில் நீயும் நானும் நட்பும், கொஞ்சும் குரல்களும் விவாதமுமாய் கரம் கோர்த்து தோள் சாய்ந்து இசையுள் இழைதல் போல் என்னுள் ஓர் பரவசம் நிகழும் மார்பு நெகிழும் பக்கத்தில் நீ இல்லை. ~ ஓவியம்: அருந்ததி நன்றி: ஊடறு இணையத்தளம் /poem published in பெண்கள் சந்திப்பு மலர் 2001/ |
Comments on "துளிர்ப்பின் மூலம்"
whaever above is for our தோழர் பாலாஜி a.k.a ஷிப்பாகன் party...! Cheers!!!
நல்ல கவிதை பிரதீபா.
....
//Cheers!!!//
தோழர் பாலாஜி-பாரி இப்போது எத்தனையாம் சாமத்தில் எத்தனை பியரோரு இருப்பார் என்பதை யாரறிவார் :-)?
தோழருக்கும் உங்களுக்கும் அன்பு!
நான் உங்களுக்குத்தான் எழுதிக்கிட்டீங்கன்னு நெனச்சேன்!
'திண்மமாய்' ஒரு நல்ல வார்த்தை.
அருந்ததியின் படங்கள் நன்று.
I am moved.
Nandrigal.
DJ: :)
"ஊருக்கிளைத்தவன் ஆண்டி" என்பதாக பாரி-பாலாஜியிலே உங்கள் எல்லோருக்கும் ஒரு நக்கல். உது சரியில்லை. பாரி-பாலாஜி இதுக்காண்டியேனும் நீங்கள் நயாகாரா விழிப்படமும் மெழுகுவர்த்தி ஒளிப்படமும் இன்னும் ரெண்டு போடோணும்.
;-)
இது நக்கலுக்கு இல்லை ப்ரோ.
இது நக்கலுக்கு இல்லை ப்ரோ. எங்களுடன் கூடிக்குலாவிய அருமை நண்பர் எமது குழாத்தைவிட்டுப்போகின்றாரே என்ற கவலையினால் மட்டும் என்பதே உண்மையாம். அந்த உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லையாம்
ஐயோ தோழர் பாலாஜி-பாரியை நக்கலடிப்போமா?!
அவர் போற/வாற இடமெல்லாம் பாட்டுப்போட்டு சதாய்க்கிறவர் யார்?
சும்மா தேமே என்றிருக்கிற அப்பிராணி(?!) 'நல்ல பாம்...sorry பிள்ளளையளுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்த புண்ணிவயதி எங்கே?
அப்படியெல்லாம் நாம் செய்வோமா? ஆக, இது அவரது 'தற்சமய' உணர்வுகளுக்கான ஒரு background effect :-).'உங்கட feelings ஐ நாங்கள் புரிந்துகொள்கிறோம்' என்று!
இதற்குப் பொருத்தமாய் 'பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை' என்ற பாடலைப் போட்டிருப்பீர்களோ என்று நினைத்...தேன் ;-)
அது நிறையவே சோகரசம் சொ/கொட்டும் என்றபடியால்.
நீங்களோ 'காற்று மரம்' என்று அவரை மறுபடி மறுபடி செடியையும் மேகத்தையும் பார்க்க வைத்தலையே நோக்கமாய் வைத்திருக்கிறிங்க போல...
நவம்பர் மட்டும் அப்படி அலைக்கழிக்க விரும்பாமல், நாம் 'அவ்வப்போது' குரல் கொடுக்கிறோம். இதிலென்ன உங்களுக்கு நக்கல்?
..........
சந்தரவடிவேல்: இது 'யாருக்காக' என்பதற்கு 2001 இற்குப் போகவேண்டி இருப்பதாலும், அந்த விசயத்தை (அடக்கி) சிறிய எழுத்துக்களில் குறுக்கி இருக்கிறது :-).அப்பறம் நானே என் விருப்பப் பாடலைக் கேட்கவேண்டி...
ஏன் வம்பு?!
Cheers..........!
கொஞ்சம் புரியும்படித்தான் எழுதுங்களேன், பாலாஜி எங்கே செல்கிறார், தனியாகவா இல்லை ... :)
ஐயோ, வண்ணம் கொண்ட வெண்ணிலவை ஆறேழு ஆண்டுகள் தேடிக் கண்டுபிடித்ததைப் பற்றி ரோசா வசந்திடம் ஒரு முறை ஒப்பாரியே வைத்துச் சொல்லியிருக்கிறேன். அதனால், அதை வைத்துக்கொண்டு, காற்றையும் மரத்தையும் சிம்பானுக்குக் கடன் கொடுத்தேன்.
இதெல்லாம் background effect ஆ back_to_ground எழுத்தா என்று எனக்கு ஆத்திரமே வருகின்றது இதற்குள்ளே தானும் முஸ்தபா அப்பாஸ், வினோத் எல்லாருமே முஸ்தபா என்கிறார் ப்ரோ. இதுவா நட்பு? இடுக்கண் வருங்கால் இகுக என்பதுபோல... . ஏற்கனவே கலங்கிப்போயிருக்கும் அந்தக்குழந்தை வள்ளலை விள்ளிவிள்ளிப் பிய்க்கின்றீர்களே; இது சரியா முறையா தர்மந்தானா? சேச்சே! கொஞ்சம் கூட முறையில்லை. நீங்க அழாதீங்கோ பாரி-பாலாஜி. மிஞ்சனால் கெஞ்சினால் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தானே
===
இத்தனை நாள் சுந்தரமாயிருந்தது இன்றைக்குச் சந்திரமாயிருக்கிறது. இனி, தேய்பிறைதான் ;-)
இந்த கவிதை,பாடல் வரிகளால் களம் கொடுக்கும் நண்பர்களுக்கு நன்றிகள். பெயரிலி, இந்த நண்பர்களுக்கும் தேவையான BGM கொடுக்க வேண்டிவரும் சந்தர்ப்பத்திற்கான முதலீடே இது என்பதை அறியாதவரோ நீர்?.
இருந்தாலும் ப்ரோ குழுவில் என்றும் நான் இருந்து தீரா இடும்பை தருவேன்.
களமாடவேண்டிய நீரே களம் கொடுத்தாருக்கு நன்றி சொன்னப்பிறகு நானென்ன சொல்லக்கிடக்கிறது. நன்றாக இருந்து தீராத இடும்பையோ கடோற்கஜனோ பெற்றுப்போம்