ஒரு மூர்க்க தேவதை மற்றும் தனிமையில் வருகிற கவிதைகள்
1. அவளது கைகளை நான் நேசித்தேன் அவை பொது நிறமோ பொன் நிறமோ அன்றி கண் கவரும் கறுப்பும் இல்லை ஏன், இரத்தங்கூட ஓடல் தெரியும் றோசா நிறமும் இல்லை இது புதுவித ம். மஞ்சள் ஆம்: அம் மஞ்சட் கைகளை நான் ஒருமுறை, பல கணம் அளவு கடந்து நேசித்தேன் சுருண்ட சுருங்கின கைகளுள் இவை புதுசு மெல்லிய தடிப்புமிகு வெள்ளைப் பட்டர்க் கைகளை கண்டதும் கவலை தரும் நீள் விரல்களை இன்று வெறுத்தேன் என்றில்லை அன்றில் அவள் வயது பதின் ஐந்திலிருந்து பதினாறு வரை. தடம் மாறுவேனோ எனப் பயந்த பருவத்தில் முகமும் கைகளுடன் பொருந்திய சமயத்தில் இரு விழிகளின் அபூர்வ ஒற்றுமைபோல கைத் தோலின் நிறமும் முகத்தின் பொலிவும் கை கூடி வந்தது உயிருடன் இருக்கும் கைகளைப் பற்றி கைக்குள் திணித்து கதறத் தூண்டிய கரங்களை காணும் நேரமெல்லாம் என்னுள் கற்கள் அறிந்திருக்க மாட்டாள் அழகியன நேசிப்பன அனைத்தும் அடங்கிய அவள் இறந்து போனபின் தலையற்ற வெறும் முண்டத்தைப் பார்த்து மகிழ்வுறுவது எங்ஙனம் சாத்தியம் 2. பற்களைப் பற்றி பிரக்ஞையற்று இருந்தேன் என்னைக் கேட்டால் அவள் பற்களை விடவும் உதடுகளே அழகானவை கம்பி போட்டுச் சிதைக்கிறாள் சிதைக்காமல் சிறகுகள் எப்போ விரியும் 3. கண்கள் நான் இங்கு குறிப்பிட விரும்புவது மீனென்றோ மானென்றோ மிரட்சியென்றோ ஏதாகினும் ம கரத்தில் தானோ அல்ல அவள் கண் ஈரம் 4. வட்டமடிக்கும் முறைக்கும் ஒரு போதும் தவிக்காது திமிர், துணிவு, நான் எனப்பல பெண்மை நிரப்பிப் பேசும், பேசாது விடும் மனசுக் கேற்ப மாறும் அவள் விழிகள் 5. அவள் எழும்ப வேண்டும் நானும் எழும்ப வேண்டும் இருவருக்கும் எண்ணமில்லை; எழவும் இல்லை முட்களை முறைக்கும் நாட்களும் விறைத்து விரையும் நாட்களும் விறைக்காது நாட்கள் எப்போ விரையும்? ~ யனவரி 25, 00 -------------------------------------------------------------- happy birthday ma sister, U r beautiful as always.. |