Name:
Location: DIASborough, Ontario, Canada

Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.

Powered by Blogger

Sunday, September 11, 2005

துளிர்ப்பின் மூலம்















வெளியில் வெறுமையாய் தெரு

திண்மமாய் ஓர் அசைவும் அற்றுப் போன இரவில்
கடும் சுமை கமழும் அறையில்
கட்டில் அருகே
யன்னல் என் விம்பத்தை விழுத்தும்
வெளிச்சத்தை அணைத்து
வெளியில் குமிளும் தெரு விளக்குப் படர்கையில்
என்னுள் உன் இன்மையின் சாயல்

என்னோடு சேர விரும்பும்
உன் வெளிப்படை
என்றாகிலும் எனக்கும் வாய்க்குமெனில்
உனக்கான நேசத்தை உணர்த்திட முடியும்
உலகில் உயர்ந்தது அது என
சொற்களால் இட்டுக் கட்ட
வார்த்தைகள் என்னிடம் வசப்படுவதும்
இல்லை

இருளும் இளகுதலும்
ஒரு நதி ஓரத்தில்
நீயும் நானும்
நட்பும், கொஞ்சும் குரல்களும்
விவாதமுமாய்
கரம் கோர்த்து
தோள் சாய்ந்து
இசையுள் இழைதல் போல்
என்னுள்
ஓர் பரவசம் நிகழும்
மார்பு நெகிழும்

பக்கத்தில் நீ இல்லை.
~



ஓவியம்: அருந்ததி
நன்றி: ஊடறு இணையத்தளம்

/poem published in பெண்கள் சந்திப்பு மலர் 2001/

என்னுடைய நாட்கள்
























கருநீல வானம் பழசு எனும்
கவிஞர் மத்தியில்
'இறக்கைகள் விரித்துப் பற’
கடைசி வரி எழுதிவிட்டு
வீட்டுக்குட் பறந்த எழுதாப் பெண்கள்

அட, என்னுடைய நாட்கள்
பச்சைத் தரை
நதிக் கரை மஞ்சட் பூக்களல்ல.
நம்பிக்கையை உடலெங்கும் பரவ விட்டு
மதுக் குளிர்மையாய்
உற்சாகமாய் இருப்பேனென
வேண்டுமானால் நம்பிக் கொண்டிரு

எழுதுகோலின் கோலமெல்லாம்
வெறும் கோஷங்களாக சுருங்கிப்போன பின்
மேலும் நான் சிறகுகளை நம்பத் தயாரில்லை

இவ் இலட்சணத்தில்
என் உயிரின் அடித்தளத்தை
திறந்து வேறு காட்ட வேண்டுமா?

இன்றைய கணத்தில் என் ஒரே ஆசையும்
எளிய வேட்கையும்
எனைத் தழுவும் காற்றை
நேசிப்பது மாத்திரமே
~


ஜீலை 05, 2000
11:18 p.m.


ஓவியம்: Moniha
நன்றி: ஊடறு இணையத்தளம்
(poem published in பெண்கள் சந்திப்பு மலர் 2001)